மனதை உருக்கும் மரணம்... பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை கண்ணீர்..!!

மனதை உருக்கும் மரணம்... பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை கண்ணீர்..!!

மனதை உருக்கும் மரணம்... பிரபல பிக்பாஸ் தமிழ் நடிகை கண்ணீர்..!!
X

ஜீவா நடிப்பில் வெளியான ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ‘துருவங்கள் பதினாறு’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஜோம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

யாஷிகா கடந்த 24ம் தேதி இரவு சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்றுள்ளார். மகாபலிபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளி செட்டி பவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

சமீபத்தில், ஐசியுவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு யாஷிகாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (2ம் தேதி) யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “இப்போது நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த இயலவில்லை.

உயிரோடு இருப்பதே என்றென்றும் குற்ற உணர்ச்சியாக இருக்கப் போகிறது. ஒரு மோசமான விபத்திலிருந்து என்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா, இல்லை என்னுடைய உயிர்த் தோழியை என்னிடமிருந்து எடுத்துக் கொண்டதற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நொடியும் நான் உன்னை மிஸ் செய்கிறேன் பவணி.

நீ என்னை மன்னிக்கவே மாட்டாய் என்று எனக்கு தெரியும். என்னை மன்னித்து விடு. ஒரு மோசமான நிலையை உன் குடும்பத்திற்கு ஏற்படுத்தி விட்டேன். உன்னுடைய ஆத்மா அமைதி அடையும் என்று நம்புகிறேன். நீ என்னிடம் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன். ஒருநாள், உன் குடும்பத்தினர் என்னை மன்னிப்பார்கள் என்று நம்புகிறேன்.

நம்முடைய நினைவுகளை நான் என்றென்றும் பாதுகாப்பேன். நான் என்னுடைய பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை. என்னுடைய ரசிகர்களும் கொண்டாட வேண்டாம் என்று கோரிக்கை வைக்கிறேன். அவருடைய குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார்.
Tags:
Next Story
Share it