போலீசாருக்கு கொலை மிரட்டல்.. நடிகர் அதிரடி கைது !!

போலீசாருக்கு கொலை மிரட்டல்.. நடிகர் அதிரடி கைது !!

போலீசாருக்கு கொலை மிரட்டல்.. நடிகர் அதிரடி கைது !!
X

விசாரணைக்கு சென்ற போலீசாருக்கு கொலைமிரட்டல் விடுத்த நடிகர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடலூர் பண்ருட்டி அருகே ஏ. ஏரிப்பாளையம் கிராமத்தில் சிவமணி (38) வசித்து வருகிறார். சினிமாவில் துணை நடிகரான இவர் ‘திட்டமிட்டபடி’ என்ற படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்தும் உள்ளார். ஏற்கனவே இவர் மீது புதுப்பேட்டை காவல் நிலையத்தில் மணல் கடத்தல், தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அதாவது மணல் கடத்தியே சினிமா படத்தை இவர் தயாரித்ததாக புகார் உள்ளது. இதன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்புதான் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் சிவமணி மீது உள்ள வழக்குகள் குறித்து விசாரிப்பதற்காக புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த சிவமணியின் நண்பர்கள் அவரது வீட்டில் திரண்டனர்.

thittamittapadi

மேலும் சிவமணியும் அவரது நண்பர்களும் சரியான ஒத்துழைப்பு அளிக்காமல் விசாரணைக்கு ஆஜராகாமல் போலீசாரை அவதூறாக, ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதையடுத்து சிவமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருநாவுக்கரசு (49), கரும்பூர் ஸ்ரீதர் (37), பாக்கியராஜ் (39) ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். போலீசாரை திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக சினிமா நடிகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it