Theme Check

தொடரும் மரணங்கள்! ஷவர்மாவை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்..!!

தொடரும் மரணங்கள்! ஷவர்மாவை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்..!!

தொடரும் மரணங்கள்! ஷவர்மாவை தொடர்ந்து 12ம் வகுப்பு மாணவனை காவு வாங்கிய தந்தூரி சிக்கன்..!!
X

கடந்த மாதம் கேரளாவில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் திருமுருகன். இவர் 12ம் வகுப்புத் தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி நண்பர்களுடன் சேர்ந்த ஆரணி காந்தி நகர் சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் தந்தூரி சிக்கன் மற்றும் பிரைட் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

இதில் அந்த மாணவனுக்கு வயிற்று போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு ஆரணி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் வயிற்று போக்கு அதிகளவில் ஏற்பட்டதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் மாணவன் இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகில் இயங்கிய ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிடட சிறுமி பரிதாபமாக இறந்தார்.
இதனையொடுத்து அந்த உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்து உரிமையாளரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Next Story
Share it