Theme Check

1970க்கு பிறகு முதல்முறையாக அவசரநிலை பிரகடனம்!!

1970க்கு பிறகு முதல்முறையாக அவசரநிலை பிரகடனம்!!

1970க்கு பிறகு முதல்முறையாக அவசரநிலை பிரகடனம்!!
X

கனடாவில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

கனடா எல்லையை கடக்கும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கனடாவில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த ஒட்டவா பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

canada

இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசர நிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அதன்படி போராட்டக்காரர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களது லாரிகள் பறிமுதல் செய்யப்படும்.

ட்ரக்குகள் சார்ந்த கார்ப்பரேட் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். வாகனங்களின் இன்சூரன்ஸ் நிறுத்தி வைக்கப்படும். மேலும் போராட்டக்காரர்களால் போக்குவரத்து முடக்கிவைக்கப்பட்டுள்ள பாலங்களை உடனடியாக திறக்கவும் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

canada2

1970ம் ஆண்டுக்கு பிறகு கனடாவில் அவசர நிலை சட்டம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கனடாவின் Quebec மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக அப்போதைய கனடா பிரதமர் பியரே ட்ரூடோ அவசரநிலையை பிரகடனம் செய்தார்.

அவர் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் போராட்டம் ஒன்றுக்காக கனடாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

newstm.in

Next Story
Share it