Theme Check

தேர்தலில் தோல்வி.. ஆனாலும் மே 5ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி !

தேர்தலில் தோல்வி.. ஆனாலும் மே 5ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி !

தேர்தலில் தோல்வி.. ஆனாலும் மே 5ல் முதல்வராக பதவியேற்கிறார் மம்தா பானர்ஜி !
X

மேற்குவங்க முதலமைச்சராக நாளை மறுதினம்(ஏப்.5) மீண்டும் 3ஆவது முறையாக பொறுப்பேற்கிறார் மம்தா பானர்ஜி.

294 தொகுதிகள் கொண்ட மேற்குவங்கத்தில் 292 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. 2 தொகுதிகளில் வேட்பாளர்கள் இறந்து போனதால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, இடதுசாரி கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது.

ஆட்சி அமைக்க 148 இடங்கள் போதுமென்ற நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது. மம்தா மீண்டும் முதல்வராகிறார்.

மேற்குவங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் மம்தா பானர்ஜி. அவர் முதல்வராக பொறுப்பேற்க அனைவரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி தோல்வி அடைந்துள்ளார். ஆனாலும் அவருக்கு ஆறு மாத காலம் அவகாசம் இருப்பதால் முதல்வராக பொறுப்பேற்று, ஒரு தொகுதியில் வெற்றி பெறுவார் என தெரிகிறது.

ஏதேனும் ஒரு தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை ராஜினாமா செய்யச் சொல்லி அங்கு மம்தா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அல்லது 2 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாததால் அங்கு நடக்கும் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பு திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் குவிந்தனர். வெற்றி குறித்து பேசிய மம்தா, இந்தியாவை காப்பாற்றிவிட்டதாக கூறினார்.

newstm.in

Tags:
Next Story
Share it