Theme Check

காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்.. அடையாளங்களை சிதைப்பதாக மத்திய அரசு மீது புகார் !

காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்.. அடையாளங்களை சிதைப்பதாக மத்திய அரசு மீது புகார் !

காந்தியின் விருப்ப பாடல் நீக்கம்.. அடையாளங்களை சிதைப்பதாக மத்திய அரசு மீது புகார் !
X

குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29ஆம் தேதி படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் 44 பீகில் வாசிப்பாளர்கள், 16 ட்ரம்பட் இசைக் கலைஞர்கள், 75 ட்ரம்மர்கள் மற்றும் 6 பேண்டு வாத்தியக் கலைஞர்கள் பாடல்களை இசைப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்திக்கு விருப்பமான ’Abide with me’ என்ற பாடல் 1950ஆம் ஆண்டில் இருந்து இசைக்கப்படு வருகிறது. ஆனால், இந்த முறை நடைபெற உள்ள குடியரசு தின விழா இறுதி நிகழவில் இப்பாடல் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்துள்ளனர்.

modi

ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு இந்த பாடல் நீக்கப்பட்டபோது கடும் எதிர்ப்புகள் எழுந்ததை அடுத்த 2021ஆம் ஆண்டு மீண்டும் Abide with me பாடல் இடம் பெற்றது. தற்போது மீண்டும் இந்தப்பாடலை மத்திய அரசு நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஹென்ரி பிரான்சிஸ் லைட் என்பவர் 1847ல் Abide with me பாடலை இயற்றினார். காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபர் உயிர் பிரியும் வேதனையில் இருந்தபோது எழுதிய பாடல் இது. மகாத்மா காந்திக்கு இந்த கிறிஸ்துவப் பாடல் மிகவும் பிடித்த பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

modi

அண்மையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் கடந்த 50 ஆண்டுகளாக ஒளிர்ந்து வரும் அமர் ஜவான் ஜோதியை அணைத்துவிட்டு, அதனை தேசிய போர் நினைவு சின்னத்தில் இருக்கும் ஜோதியுடன் ஐக்கியமாக்கப்பட்டது. 1914 முதல் 1921 வரை முதல் உலகப்போரில் வீர மரணம் அடைந்த 70000 வீரர்களை நினைவு கூரும் வகையில் அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதியை அணைப்பதாக எனவும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தன.

newstm.in

Tags:
Next Story
Share it