இனி, டெங்கு - சிக்குன்குனியா பயமில்லை.. விரைவில் வருது ‘வோல்பாச்சியா’..!
இனி, டெங்கு - சிக்குன்குனியா பயமில்லை.. விரைவில் வருது ‘வோல்பாச்சியா’..!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயைத் தடுக்கும் பெண் கொசுக்களை கண்டுபிடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி கோரிமேட்டில், மத்திய அரசின் பூச்சியியல் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் வைரஸ் இல்லா கொசுக்கள் உருவாக்கபட்டுள்ளது.
ஆண் கொசுக்களுடன் இந்த புதிய வகை பெண் கொசுக்கள் இணையும் போது வைரஸ் இருக்காது. டெங்கு மற்றும் சிக்குன்குனியாவை தடுக்கும் வகையில் இந்த பெண் கொசுக்களை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு ‘வோல்பாச்சியா’ என பெயரிடப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து இந்த அரிய வகை கொசுக்களை உற்பத்தி செய்துள்ளனர். அதன் ஆராய்ச்சி முடிவுகளை விரைவில் வெளியிட இந்திய ஆராய்ச்சி மையம் முடிவு செய்துள்ளது.
Next Story

