Theme Check

டென்மார்க் நீச்சல் போட்டி.. நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பதக்கம் வென்று சாதனை

டென்மார்க் நீச்சல் போட்டி.. நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பதக்கம் வென்று சாதனை

டென்மார்க் நீச்சல் போட்டி.. நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பதக்கம் வென்று சாதனை
X

2022ஆம் ஆண்டுக்கான டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் வெள்ளிப் பதக்கமும், முன்னணி வீரர் சாஜன் பிரகாஷ் தங்கப் பதக்கமும் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், சிறுவயது முதல் தேசிய, சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை குவித்து வருகிறார். இந்நிலையில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெறும், 2022ஆம் ஆண்டு டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் பங்கேற்றார். இதில், 1500 மீட்டர் பிரிவின் இறுதிப் போட்டியில் 10 பேர் கலந்துகொண்டனர். இதில், இரண்டாவது இடத்தைப் பிடித்து வேதாந்த் மாதவன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

df

கடந்த ஆண்டு லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில கலந்துகொண்டு வேதாந்த் மாதவன் வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தார். மேலும், கடந்த ஆண்டு தேசிய அளவில் நடந்த போட்டிகளில் 7 பதக்கங்களை வென்று வேதாந்த் மாதவன் அசத்தியிருந்தார்.


இதேபோல் டேனிஷ் ஓபனில் ஆடவருக்கான 200 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில், இந்தியாவின் முன்னணி நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
வேதாந்தும், சாஜனும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் இருவரின் வெற்றியை மகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் மாதவன், கடவுளின் கருணையாலும், அனைவரின் ஆசிர்வாதத்தாலும் இவர்கள் இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்கள் வென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதேபோல் நடிகர் சூர்யாவும் இரு இளம் நீச்சல் வீரர்களுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.


newstm.in

Tags:
Next Story
Share it