Theme Check

6 மணிக்குள் வெளியேறணும், இல்லாவிட்டல்.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

6 மணிக்குள் வெளியேறணும், இல்லாவிட்டல்.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!

6 மணிக்குள் வெளியேறணும், இல்லாவிட்டல்.. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு..!
X

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டுகளுக்கு, பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் வகையில் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதைத் தொடர்ந்து, வரும் 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்ந்தெடுக்கபட்ட உறுப்பினர்களின் பதவியேற்பும், மேயர் பதவிக்கான தேர்தலும் மார்ச் 2-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன. இன்று (17ம் தேதி) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியினர் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் தேர்தல் களத்தில் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால் இன்று மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புக்கு சம்பந்தம் இல்லாத வெளியூர் நபர்கள் வெளியேற வேண்டும்.

சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வாக்காளர்கள் அல்லாத, வெளியூரில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள், கட்சித் தொண்டர்கள், தனி நபர்கள் என அனைவரும் அந்தந்த உள்ளாட்சி பகுதியில் இருந்து வெளியேறிவிட வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகள்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it