மனைவியுடன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை.. திருமணத்துக்கு முன்பே மாமியார் வீட்டுக்கு சென்ற இளைஞர் !!
மனைவியுடன் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை.. திருமணத்துக்கு முன்பே மாமியார் வீட்டுக்கு சென்ற இளைஞர் !!

திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காக வங்கியில் கொள்ளையடித்த இளைஞர் மாமியார் வீட்டுக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலம் ஹூப்ளி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கோப்பிகார் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் கடந்த 10ஆம் தேதியன்று நுழைந்த முகமூடி அணிந்த நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றார்.
அதாவது வங்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் போதே நுழைந்த அந்நபர், காசாளரை கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 6 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை பறித்துச்சென்றார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வங்கி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதன்பேரில், விஜயபுரத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர் தான் முகமூடி அணிந்து வங்கியில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதனையடுத்து பிரவீனை கைது செய்தனர். விசாரணையில், தனது திருமணத்தை ஆடம்பரமாக நடத்துவதற்காக வங்கியில் கொள்ளையடித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆடம்பரமாக திருமணம் செய்துக்கொண்டு ஆடம்பரமாக வாழ்க்கையை நடத்த திட்டமிட்டு வங்கியில் கைவைத்த இளைஞர் இப்போது மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
newstm.in

