Theme Check

ஆசையாய் நெருங்கிய கணவர்.. பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி- பகீர் பின்னணி !

ஆசையாய் நெருங்கிய கணவர்.. பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி- பகீர் பின்னணி !

ஆசையாய் நெருங்கிய கணவர்.. பிறப்புறுப்பை துண்டித்த இளம் மனைவி- பகீர் பின்னணி !
X

விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்திய கணவரின் பிறப்புறுப்பை மனைவி துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் திகம்நகர் மாவட்டம் ராம்நகர் பகுதியில் இளம் தம்பதி வசித்து வருகின்றனர். தம்பதியில் கணவனுக்கு 24 வயது, மனைவியும் 24 வயது நிரம்பியவர்கள் ஆவர். இவர்களுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணம் முடிந்த சில காலம் மட்டும் சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர். அதன்பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பால் சில காலம் தனித்தனியாக வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

family plan

அதன்பின்னர் பெரியவர்கள் சமாதானம் செய்து ஒன்றாக வாழ அனுப்பிவைத்தனர். இருவரும் ஒன்றாக வசித்து வந்திருக்கின்றனர். எனினும் கடந்த டிசம்பர் 7ஆம் தேதியன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முறை காரணம் மனகசப்பு அல்ல செக்ஸ் விவகாரம். வீட்டில் மனைவியுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள கணவர் முயன்றுள்ளார். இதில் மனைவிக்கு விருப்பம் இல்லாமல் இருந்துள்ளது. இருப்பினும் கணவர் கட்டாயப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த அவருடைய மனைவி, கணவரின் பிறப்பு உறுப்பை துண்டித்துள்ளார்.

இதனால் வலியால் துடித்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்த கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த பின்னர் தான் அந்த கொடூரச் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டிசம்பர் 7ஆம் தேதியன்று நடைபெற்ற இச்சம்பவம் குறித்து மிகவும் தாமதமாகவே கணவர் புகார் அளித்திருக்கிறார்.

family plan

தற்போது இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் ஆணின் பிறப்பு உறுப்பை பெண் துண்டிப்பது இது முதல்முறையல்ல. கடந்த மார்ச் மாதத்திலும் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பெண் ஒருவர் வீட்டில் தனியாக தனது மகனுடன் இருந்த போது அவரை பாலியல் பலாத்காரம் செய்ய ஒருவர் வீடு புகுந்துள்ளார். அவருடன் போராடிய அப்பெண் பின்னர் அந்நபரின் பிறப்புறுப்பை துண்டித்தார்.

newstm.in

Tags:
Next Story
Share it