Theme Check

வரதட்சணைக்காக இளம்பெண் சிதைப்பு.. கணவன் செய்த கொடூரச் செயலால் அதிர்ந்த மாநிலம் !

வரதட்சணைக்காக இளம்பெண் சிதைப்பு.. கணவன் செய்த கொடூரச் செயலால் அதிர்ந்த மாநிலம் !

வரதட்சணைக்காக இளம்பெண் சிதைப்பு.. கணவன் செய்த கொடூரச் செயலால் அதிர்ந்த மாநிலம் !
X

நாடு முழுவதும் சமீபகாலமாக வரதட்சணைக் கொடுமைகள் உச்சம் தொட்டிருப்பதை நம்மால் உணர முடிந்திருக்கும். கேரளாவில் வரதட்சணை கொடுமையால் 24 வயது பெண் விஸ்மயா என்பவர் உயிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அடுத்தடுத்து பல குடும்ப வன்முறை தொடர்பான புகார்களையும் வெளியே கொண்டுவந்துள்ளது.

marriage girl

உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றசம்பவங்கள் அதிகளவில் அரங்கேறி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், அதேபகுதியைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் செய்து வாழ்த்து வந்தார். திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகியும் வரதட்சணை கொடுமையை அனுபவித்து வந்துள்ளார்.

marriage girl

இந்த கொடூரச் சம்பவம் குறித்து ராஜாப்புர் காவல்நிலையத்தில் அந்த 27 வயது இளம் பெண் புகார் அளித்துள்ளார். திருமணத்துக்காக ஏராளமான வரதட்சணையை பெண் வீட்டார் அளித்திருக்கின்றனர். கர்ப்பம் ஆன போதும் குழந்தையை கலைத்துவிடுமாறு அவரை அடித்திருக்கின்றனர்.
திருமணம் முடிந்து சில மாதங்களுக்கு பின்னர் பெண் வீட்டிலிருந்து சொகுசுக் கார் வாங்கி வருமாறும், 5 லட்ச ரூபாய் பணம் கேட்டும் அப்பெண்ணை கணவர் வீட்டார் வற்புறுத்தியிருக்கின்றனர். தனது தந்தையிடம் கேட்குமாறு நிர்பந்திக்கப்பட்ட நிலையில் அப்பெண் மறுக்கவே, கணவர் கொடூரமான தண்டனையை அளித்துள்ளார்.

marriage girl

அதாவது, ஒரு நாள் கணவரின் சகோதரரும் அவரின் நண்பர்களும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள். இது குறித்து கணவரிடம் சொன்னபோது, எனக்கு காரும், பணமும் தரவில்லை என்றால் இந்த சம்பவம் தொடர்ந்து நடக்கும் என அவர் தெரிவித்திருக்கிறார். அதன்பின்னர் தான் தெரிந்தது கணவரின் சம்மதத்துடன் இந்த கொடூரம் நடந்துள்ளது என்று.

இதனால் அதிர்ந்து போன அப்பெண் தனது கணவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தலைமறைவாக இருக்கும் பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகிறார்கள். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

newstm.in

Tags:
Next Story
Share it