பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி.. ஆனால், இதை மட்டும் செய்யக்கூடாது..!
பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி.. ஆனால், இதை மட்டும் செய்யக்கூடாது..!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்குச் செல்ல பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு நாளை (29-ம் தேதி) முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், வனப்பகுதிக்குள் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

