மூட வற்புறுத்தக் கூடாது.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!
மூட வற்புறுத்தக் கூடாது.. போலீசாருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

தமிழகத்தில், 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் தெருவோரக் கடைகள், வணிக நிறுவனங்கள் போன்றவற்றை மூட வற்புறுத்தக் கூடாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. மேலும், இது மாதிரி 24 மணி நேரமும் கடைகள் செயல்பட சில விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அரசு அனுமதி தந்தால் கூட இரவு நேரங்களில் இயங்கும் வணிக வளாகம் மற்றும் உணவகங்களை மூட போலீஸ் வலியுறுத்தி வருவதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இரவு நேரங்களில் இயங்கும் தெருவோரக் கடைகள், வணிக வளாகம் மற்றும் உணவகம் ஆகியவற்றை மூட போலீஸ் வற்புறுத்தக் கூடாது எனவும், 10-க்கு மேற்பட்ட ஊழியர்கள் கண்டிப்பாக அந்த தெருவோரக் கடைகள், வணிக நிறுவனங்களில் பணியாற்ற வேண்டும்.
அப்படி 10 ஊழியர்கள் வேலை பார்த்தால் மட்டுமே அந்த கடைகள் 24 மணி நேரமும் இயங்கலாம் எனவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை காவல் ஆணையர்கள் அனைவரும் பின்பற்றும்படி டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கியுள்ளார்.

