Theme Check

ஸ்டிக்கரை கிழிங்க.. காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

ஸ்டிக்கரை கிழிங்க.. காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!

ஸ்டிக்கரை கிழிங்க.. காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு..!
X

“காவலர்கள், தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்” என, டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி, சென்னை ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது’ என கூறப்பட்டுள்ளது.
காவலர்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் இருந்து போலீஸ் என்ற போர்டு  அல்லது ஸ்டிக்கர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என டிஜிபி ...
அந்த உத்தரவின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள காவலர்கள் தாங்கள் பயன்படுத்தும் தனிப்பட்ட வாகனங்களில் ‘போலீஸ்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும், இந்த உத்தரவை பின்பற்றியது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அனைத்து காவல் ஆணையர்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Next Story
Share it