தனுஷ் விவாகரத்து குறித்து முன்பே சூசகமாக கூறிய செல்வராகவன்!?
தனுஷ் விவாகரத்து குறித்து முன்பே சூசகமாக கூறிய செல்வராகவன்!?

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணன் செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ஆகிய இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.
அந்த பதிவில், 18 வருட காலமாக நண்பர்களாக, இணையராக, பெற்றோராக, நலம் விரும்பிகளாக இருந்ததாகவும், இந்த பயணம் புரிதலுடனும், அனுசரிப்புடனும், வளர்ச்சியுடனும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இன்று இருவரும் வெவ்வேறு பாதைகளில் நிற்பதாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாகவும் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மேலும், இதனை தனிமனிதர்களாக தங்களை இன்னும் புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனால் தங்கள் முடிவுக்கு மதிப்பளித்து, தனியுரிமையுடன் தாங்கள் இதனை கையாள ஒத்துழைப்பு அளிக்கும்படி அனைவரையும் தனுஷ் கேட்டுக் கொண்டார். நேற்று முழுவதும் இச்செய்தி பேசு பொருளானது. இந்நிலையில் சின தினங்களுக்கு முன்பு தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவன் பதிவிட்ட ட்வீட் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது.
அதில், தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.
— selvaraghavan (@selvaraghavan) December 3, 2021
தனுஷ் - ஐஸ்வர்யா இருவருக்குமிடையேயான பிரச்னை உச்சத்தில் இருக்கும் போது தான், செல்வராகவன் இவ்வாறு பதிவிட்டிருக்கக் கூடும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
newstm.in

