ரஜினியுடன் சேர்ந்து விருது பெறும் தனுஷ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
ரஜினியுடன் சேர்ந்து விருது பெறும் தனுஷ்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர் நடிகர் ரஜினி காந்த். தமது நடிப்பால் ரசிகர்களின் உள்ளம்கவர்ந்தவர் நடிகர் தனுஷ். நடப்பாண்டில் நடிகர் தனுஷுக்கு தேசிய விருதும், நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒரே நாளில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரைத்துறையில் உயரிய விருதான, தாதா சாகேப் பால்கே விருது ரஜினிக்கும், நடிகர் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் வழங்கப்பட உள்ளது.

67வது தேசிய விருது வழங்கும் விழா, மே மாதம் 3ம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்த அதே தேதியில் தான் நடிகர் ரஜினிகாந்துக்கும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. ரஜினி, தனுஷ் இருவரும் ஒரே நாளில் விருது பெறுவது இரு நடிகர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தனக்கு நெருக்கமானவர்களிடம், ரஜினியுடன் சேர்ந்து ஒரே நாளில் விருது பெறுவது தான் பெரிய விருது என்று புளங்காங்கிதம் அடைந்து வருகிறாராம் தனுஷ்.

