Theme Check

எஸ்.ஐ.க்கு சுற்றிவளைத்து தர்மஅடி.. தடுக்கவந்த பெண்ணுக்கும் விழுந்த அடி.. உயரதிகாரிகள் ஷாக்

எஸ்.ஐ.க்கு சுற்றிவளைத்து தர்மஅடி.. தடுக்கவந்த பெண்ணுக்கும் விழுந்த அடி.. உயரதிகாரிகள் ஷாக்

எஸ்.ஐ.க்கு சுற்றிவளைத்து தர்மஅடி.. தடுக்கவந்த பெண்ணுக்கும் விழுந்த அடி.. உயரதிகாரிகள் ஷாக்
X

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் காவல் நிலைய எஸ்.ஐ.ஆக ஷேக் சபீக் என்பவர் உள்ளார். இவருக்கு அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

எஸ்.ஐ.வுடன் தொடர்பில் இருந்த பெண் ஏற்கனவே திருமணம் முடிந்தவர் ஆவார். இதுபற்றி அந்த பெண்ணின் கணவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மூலம் தெரிந்து கொண்டார். இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த பெண்ணின் கணவர் வேலை விசயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.

police

இதனால் அப்பெண் உடனடியாக தன்னுடைய கள்ளக்காதலன் எஸ்.ஐ. ஷேக் சபீக்கு போன் செய்து வீட்டுக்கு வரவழைத்தார். அருகிலேயே வேறொரு வீட்டில் மறைந்து இவற்றை கவனித்து கொண்டிருந்த பெண்ணின் கணவர் எஸ் ஐ ஷேக் சபீ தன்னுடைய வீட்டுக்குள் சென்று மனைவியுடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் சென்று கதவை தட்டியுள்ளார்.

பின்னர் வீட்டிற்குள் புகுந்த அவர்கள் எஸ்.ஐ. ஷேக் சபீயை கடுமையாக தாக்கினார். இதை தடுக்க முயன்ற மனைவிக்கும் தர்ம அடி விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று தர்ம அடி வாங்கி படுகாயமடைந்த எஸ்.ஐ யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதனிடைேய, இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it