Theme Check

தவான், குர்ணால், பிரசித் கிருஷ்ணா அசத்தல்... இந்திய அணி அபார வெற்றி !!

தவான், குர்ணால், பிரசித் கிருஷ்ணா அசத்தல்... இந்திய அணி அபார வெற்றி !!

தவான், குர்ணால், பிரசித் கிருஷ்ணா அசத்தல்... இந்திய அணி அபார வெற்றி !!
X

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா, ஷிகர் தவான் களமிறங்கினார்கள். நீண்ட இடைவெளிக்கு பின் ஷிகார் தவான் இன்றையப் போட்டியில் ஃபார்முக்கு திரும்பினார்.

ரோஹித் சர்மா 28 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டடாகி வெளியேறினார். அடுத்து வந்த கோலி, தவான் உடன் பார்ட்னர்ஷிப் வைத்து சிறப்பாக விளையாடினர் . கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்து 56 ரன்களில் அவுட்டானார். தவான் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டு 98 ரன்னில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் அவுட்டானார்.

கே.எல்.ராகுல் மற்றும் குர்ணால் பாண்டியா இறுதி ஓவர்களில் இங்கிலாந்து பந்துவீச்சை புறட்டிஎடுத்தனர். குர்ணால் பாண்டியா 31 பந்துகளில் 2 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 58 ரன்கள் விளாசினார். கே.எல்.ராகுல் 62 ரன்கள் எடுக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து அணி 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஜாசன் ராய், ஜானி பாரிஸ்டோவ் அதிரடியாக ஆடி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினர். 14 ஒவர்களில் இங்கிலாந்து அணி 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.

முதல் விக்கெட்டை இங்கிலாந்து அணி இழந்த உடன் அடுத்தடுத்து தடுமாற்றங்களை சந்தித்தது. சர்துல் தாகூர் ஒரே ஓவரில் கேப்டன் இயான் மார்கன், ஜோஸ் பட்லரை அவுட்டாக்கி அசத்தினார். மறுபுறம் அறிமுக வீரர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இறுதியாக இங்கிலாந்து அணி 42.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it