Theme Check

இந்தியாவின் முதல் ஸ்பை அனிமேஷன் தொடரில் தோனி! கலக்கும் சாக்‌ஷி தோனி!

இந்தியாவின் முதல் ஸ்பை அனிமேஷன் தொடரில் தோனி! கலக்கும் சாக்‌ஷி தோனி!

இந்தியாவின் முதல் ஸ்பை அனிமேஷன் தொடரில் தோனி! கலக்கும் சாக்‌ஷி தோனி!
X

இந்திய கிரிகெட் ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று கொண்டாடபட்டு வரும் எம்.எஸ்.தோனியின் ஜெர்சி எண் 7. கிரிக்கெட் ரசிகர்கள் மிக ஆவலுடன் இந்த எண் பதித்த டீ-சர்ட் அணிந்து போட்டிகளை கண்டு ரசிப்பார்கள்.

தற்போது, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ​'கேப்டன் 7' என்ற தலைப்பில் புது அனிமேஷன் தொடர் ஒன்றைத் தயாரிக்கிறார். உளவு தொடரான இந்த ‘கேப்டன் 7’ தற்போது ப்ரீ புரொடக்‌ஷன் பணிகளில் இருக்கிறது. இந்தத் தொடரின் முதல் சீசன், இந்தியாவின் முன்னாள் கேப்டனை அடிப்படையாகக் கொண்டது. பல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தோனி இந்த 7 எண்ணை பதித்த ஜெர்சியை அணிந்திருந்தார். இந்த தொடருக்கான திட்டம் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி சிங் தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

இந்தியாவின் முதல் அனிமேஷன் உளவு பிரபஞ்சம் எனக் கருதப்படும் இந்த தொடர் அடுத்த ஆண்டு முதல் சீசனுடன் தொடங்கவிருக்கிறது. "கேப்டன் 7" சாகசங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்று தோனியின் மனைவி சாக்க்ஷி தெரிவித்துள்ளார். மஹியை அடிப்படையாகக் கொண்ட ஒரு அனிமேஷன் புனை கதையைத் தொடர் நிகழ்ச்சியாக தயாரிக்கலாம் என்கிற ஐடியாவுடன் ப்ளாக் அண்ட் ஒயிட் நிறுவனத்தினர் எங்களிடம் வந்த போது, ​​நாங்கள் கப்பலில் இருந்தோம்’ என்று சிரித்தப்படியே கூறினார் தோனியின் மனைவி. இந்த தொடர் நிச்சயம் ஒரு சாகச பயணத்தை விவரிப்பதாக இருக்கும் என்றார்.

விளையாட்டு எங்கள் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமானது. நாங்கள் தோனியின் மிகப் பெரிய ரசிகர்கள். இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள தளங்களில் வெளியாகும் என்றார்.

Tags:
Next Story
Share it