Theme Check

தோனி தான் வர்றாரு! சூப்பர் கிங்ஸ்ல கலக்கப் போறாரு!

தோனி தான் வர்றாரு! சூப்பர் கிங்ஸ்ல கலக்கப் போறாரு!

தோனி தான் வர்றாரு! சூப்பர் கிங்ஸ்ல கலக்கப் போறாரு!
X

மூன்று முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் மோசமாக விளையாடி, முதன் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் 7வது இடத்தை பிடித்தது.

தோனி தலைமையிலான சிஎஸ்கே இந்த சீசனில் தனது முதல் ஆட்டத்தில் வரும் 10ம் தேதி மும்பையில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே அந்த அணியின் அனுபவ வீரர்கள் தான். ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் இந்த அனுபவம் சிறந்த பலனை கொடுத்து வந்துள்ளது.

தோனியின் தலைமைப் பண்பு எப்போதுமே அணியின் வீரர்களை உற்சாகமாக வைத்திருக்கிறது. சுரேஷ் ரெய்னா மீண்டும் திரும்பியிருப்பது பேட்டிங் குழுவின் ஸ்திரத்தன்மையை வலுவடையச் செய்யக்கூடும். ரெய்னா, டு பிளெஸ்ஸிஸ், தோனி, அம்பதி ராயுடு, ரவீந்திரஜடேஜா, சேம் கரண், மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் எதிரணியின் பந்து வீச்சை விளாசி அதிக ரன்களை எடுக்க கூடியவர்கள். நிகிடி, ஷர்துல் தாக்கர்,சேம் கரண், தீபக் ஷாகர் என பவுலிங்கில் கலக்க கூடியவர்களும் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் இருக்கிறார்கள்.

Tags:
Next Story
Share it