Theme Check

சென்னை மெரினாவில் காமராஜருக்கு இடம் தர மறுத்தாரா கலைஞர் கருணாநிதி ?- அது உண்மையா..?

சென்னை மெரினாவில் காமராஜருக்கு இடம் தர மறுத்தாரா கலைஞர் கருணாநிதி ?- அது உண்மையா..?

சென்னை மெரினாவில் காமராஜருக்கு இடம் தர மறுத்தாரா கலைஞர் கருணாநிதி ?- அது உண்மையா..?
X

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் 120ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் இறப்பின்போது, அவர் பதவியில் இல்லாத போது இறந்ததை காரணம் காட்டி அப்போதைய முதல்வர் கருணாநிதி மெரினாவில் இடம் தர மறுத்தார் என பரவலான பேச்சு இருக்கிறது. அது உண்மையா ? வாங்க பார்க்கலாம்.

காமராஜருக்கு மெரினாவில் இடம்தர கருணாநிதி மறுத்தாரா?-  உண்மை இதோ

இந்த விவகாரத்தில் நடந்த உண்மை குறித்து சில செய்தித்தாள் ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவை யாவெனில், முதலில் காமராஜரின் உடல் புதைக்கப்படவில்லை. அவர் சார்ந்த சமுகத்தின் மரபுப்படு எரிக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இறந்த காமராஜருக்கு வாரிசுகள் இல்லாத நிலையில், அவரது தங்கைப் பேரன் உடலை தகனம் செய்தார் என்பது தான்.

காமராஜருக்கு மெரினாவில் இடம்தர கருணாநிதி மறுத்தாரா?-  உண்மை இதோ

அதேபோல காமராஜருக்கு இறுதி மரியாதை விஷயங்களை காங்கிரஸ் அலுவலகத்திலேயே முடித்துக்கொள்ள அப்போதைய கமிட்டி நிர்வாகிகள் முடிவெடுத்தனர். ஆனால் இது குறித்து அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி, ''காமராஜர் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல. இந்த தேசத்தின் சொத்து, அவரது உடலை ராஜாஜி ஹாலில் வைத்து அரசு முறைப்படிதான் தகனம் செய்யவேண்டும்" என்றார்.

அதோடு இதில் எத்தகைய சட்ட சிக்கல் ஏற்பட்டாலும் பரவாயில்லை. இதற்காக மத்திய அரசின் அனுமதியும் தேவையில்லை என திட்டவட்டமாக உத்தரவு பிறப்பித்தார். பின்னர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, காந்தி மண்டபத்தின் ஒரு பகுதியில் காமராஜருக்கு நினைவு மண்டபம் எழுப்பினார். இது தான் நடந்த உண்மை.

Next Story
Share it