Theme Check

பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா எலான் மஸ்க்..?

பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா எலான் மஸ்க்..?

பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாரா எலான் மஸ்க்..?
X

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராகவும் இருப்பவர் எலான் மஸ்க். இவர் சமீபத்தில் ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.3.30 லட்சம் கோடி) வாங்குவதாக ஒப்பந்தம் செய்தார்.

இந்த நிலையில், போலி கணக்குகள் குறித்து தகவல்கள் திரட்டுவதற்கு அவகாசம் தேவைப்படுவதாகவும், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எலான் மஸ்க் மீது ஒரு பரபரப்பு குற்றச்சட்டு எழுந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு தனி விமானத்தில் பறந்த போது, அங்கு பணியில் இருந்த பணிப்பெண்ணிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார் என்று பிரபல செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.

இதையடுத்து அந்த தவறை மறைப்பதற்காக, கடந்த 2018-ம் ஆண்டு, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம், ரூ. 1.93 கோடி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதனை எலான் மஸ்க் திட்டவட்டமாக மறுத்து உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நான் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசிவருகிறேன். இதனால் என்மீது அரசியல்ரீதியான தாக்குதல்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஆனால், அவர்களெல்லாம் என்னைச் சிறந்த எதிர்காலத்துக்காகப் போராடுவதிலிருந்தும், சுதந்திரம், பேச்சுரிமை குறித்து பேசுவதிலிருந்தும் தடுக்க முடியாது. பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட நான் முனைந்திருந்தால், எனது 30 ஆண்டுக்கால வாழ்க்கையில் இதுவே முதன்முறையாக வெளிச்சத்துக்கு வர வாய்ப்பில்லை. எனவே, என்மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags:
Next Story
Share it