Theme Check

பெங்களூரு தப்பினாரா ராஜேந்திர பாலாஜி? கைது செய்ய 6 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை !

பெங்களூரு தப்பினாரா ராஜேந்திர பாலாஜி? கைது செய்ய 6 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை !

பெங்களூரு தப்பினாரா ராஜேந்திர பாலாஜி? கைது செய்ய 6 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை !
X

பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. அப்போதைய காலக்கட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பதவியை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

குறிப்பாக ஆவின் உள்ளிட்ட நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த மாதம் 18ஆம் தேதி இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

rajenthira balaji

இதனைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால், பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனுவை நேற்று (டிச.17) சென்னை உயர் நீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்தது. முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய தீவிரம் காட்டினர்.

அப்போது தான் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நால்வரை பிடிக்க உடனே 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விருதுநகர், சாத்தூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜி தேடப்பட்டு வருகிறார்.

rajenthira balaji

இதனிடையே,ராஜேந்திர பாலாஜி பெங்களூருவுக்கு தப்பிச்சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், அவரை தேடி பெங்களூரு செல்லவும் தனிப்படை காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்ப அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it