Theme Check

பிரதமரை சந்தித்தாரா அமைச்சர் ? அமைச்சருக்கு கொரோனா பாதிப்பால் பீதி !!

பிரதமரை சந்தித்தாரா அமைச்சர் ? அமைச்சருக்கு கொரோனா பாதிப்பால் பீதி !!

பிரதமரை சந்தித்தாரா அமைச்சர் ? அமைச்சருக்கு கொரோனா பாதிப்பால் பீதி !!
X

உலகம் முழுவமும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டு, 3ஆவது அலைக்கு தயாராகி வருகிறது. இரண்டாவது அலையில் இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கும் டெல்டா வகை வைரஸ் பரவி ஏராளமான மக்களின் உயிரை காவு வாங்கியது. அதன்பின்னர் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற்றுள்ள நிலையில், கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மருத்துவ நிபுணர்கள் தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனாலும், இதையும் மீறி கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இங்கிலாந்து அரசு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். நேற்று முன்தினம் பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு அமைச்சர் ஜாவித் சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே, சுகாதாரத் துறை அமைச்சர் சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார். அதன்பின்னரும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it