Theme Check

டீசல் விலை 25 உயர்வு!!

டீசல் விலை 25 உயர்வு!!

டீசல் விலை 25 உயர்வு!!
X

மொத்தமாக வாங்குவோருக்கு டீசல் விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வை சுட்டிக்காட்டி எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையை உயர்த்தியுள்ளன.

உக்ரைனில் ரஷ்யா ராணுவத் தாக்குதலை பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கிய பின் போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் உலகம் முழுவதும் பணவீக்கம் உயர்ந்து உணவுப் பொருட்களின் விலை உயர்ந்தது.

diesel

சில்லறை விலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாத நிலையில் மொத்தமாக வாங்குவோருக்கு மட்டும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும், பெட்ரோல் பம்புகளில் விற்கப்படும் சாதாரண டீசல் விலையில் தற்போது எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை.

விலை அதிகரிப்பால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு நாள்தோறும் பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் 15 முதல் 16 லட்சம் லிட்டர் டீசல் கொள்முதல் செய்து வருகிறது. விலை உயர்வை சமாளிக்க சில்லறை விலையில் டீசல் வாங்க எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

diesel

அரசுப் போக்குவரத்து கலக்கம் மட்டுமின்றி தொழிற்சாலைகள் மற்றும் பெரு நிறுவனங்களும் மொத்தமாக டீசல் வாங்குகின்றன. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சில்லறை விற்பனை விலையை விட லிட்டருக்கு 64 காசு குறைவாக டீசல் வழங்க எண்ணெய் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் நாள்தோறும் ரூ.3.5 கோடி இழப்பு தவிர்க்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்

newstm.in

Next Story
Share it