வாட்ஸ் அப்பில் டிஜிலாக்கர் சேவை!!
வாட்ஸ் அப்பில் டிஜிலாக்கர் சேவை!!

டிஜிலாக்கர் சேவைகளை வழங்க வாட்ஸ் அப் உடன் MyGov தற்போது கைகோர்த்துள்ளது.
மத்திய அரசு அறிவித்த பல்வேறு கொள்கைகளில் பிரதானமானது டிஜிட்டல் இந்தியா. அதன்படி மத்திய அரசு, பொதுமக்கள் தங்களுடைய முக்கிய ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பாதுகாப்பாக வைத்திருக்க டிஜிலாக்கர் என்ற பயன்பாட்டை அறிமுகம் செய்தது.
தற்போது இந்த பயன்பாட்டை வாட்ஸ்அப் மூலம் அணுகும் வகையிலான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வாட்ஸ்அப்பின் MyGov ஹெல்ப் டெஸ்க் மூலம் வசதியை மேம்படுத்துவதற்கு அரசு செயல்பட்டு வருகிறது.

பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், 12ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சிச் சான்றிதழ், வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC), இருசக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பாலிசி, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் மற்றும் காப்பீட்டுக் கொள்கை ஆவணம் உள்ளிட்டவைகளைப் பெற முடியும்.
உங்கள் தொடர்பில் +919013151515 என்ற எண்ணைச் சேமிக்கவும். பின் அந்த எண்ணுக்கு Namaste or Hi or Digilocker என அனுப்பவும். Digilocker Helpdesk வழங்கும் சேவைகளின் பட்டியலை அனுப்பும். நீங்கள் பெற விரும்பும் சேவையின் எண்ணை உள்ளிட வேண்டும்.

செயல்முறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்டதும் டிஜிலாக்கர் ஹெல்ப் டெஸ்க் அனைத்து ஆவணங்களையும் பகிரும். ஆனால் இந்த அனைத்து வழிமுறைகளுக்கும் முன்னதாக கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும் டிஜிலாக்கர் செயலியில் ஆவணங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். அவர்களே இந்த சேவைகளை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Fetching your important documents is now as easy as chatting with your friend on WhatsApp!
— MyGovIndia (@mygovindia) May 23, 2022
Enjoy #DigiLocker services through the #MyGovHelpdesk. Send 'Hi' to 9013151515 on WhatsApp to access your Insurance Documents, PAN Card, Driving License, etc. pic.twitter.com/pbSOnLmOE0
newstm.in

