ஹீரோவாக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்..!
ஹீரோவாக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்..!

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் நடிகருமான திண்டுக்கல் ஐ. லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ் பட்டிமன்ற பேச்சாளர்களில் மிகவும் பிரபலமானவர் திண்டுக்கல் ஐ. லியோனி. இவர் ‘கங்கா கவுரி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், திமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் இவருடைய மகன் லியோ சிவகுமார் ‘அழகிய கண்ணே’ என்கிற படத்தின் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை சீனு ராமசாமியிடன் உதவி இயக்குநராக இருந்த வந்த விஜயகுமார் என்பவர் இயக்குகிறார். ஏ.ஆர். ஆசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் ஏ.ஆர். ரகுநந்தன் இசை அமைக்கிறார். சமீபத்தில் படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், ‘அழகிய கண்ணே’ படப்பிடிப்பு வரும் இன்று முதல் துவங்குகிறது.

