இயக்குநர் ஜனநாதன் உடல் நிலை கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி!

இயக்குநர் ஜனநாதன் உடல் நிலை கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி!

இயக்குநர் ஜனநாதன் உடல் நிலை கவலைக்கிடம்! மருத்துவமனையில் அனுமதி!
X

உடல்நலக்குறைபாடு காரணமாக பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயற்கை என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர். பொதுவுடமை சிந்தனை கொண்டவர். ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இவர்.

தற்போது விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் லாபம் என்ற படத்தை இயக்கி வந்தார். படத்தின் பெரும்பாலான வேலைகளும், படப்பிடிப்பும் முடிந்து விட்ட. நிலையில் படத்தின் எடிட்டிங் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. நேற்று எடிட்டிங் பணிகளை இயகுநர் ஜனநாதன் மேற்கொண்டிருந்தார். பின்னர், மதியம் உணவருந்தி விட்டு வருவதற்காக வீட்டிற்கு சென்றவர், மாலை 3.30 மணி வரையில் திரும்ப வரவில்லை என்று இயக்குநரைத் தேடி அவரது உதவியாளர்கள், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டின் கதவு திறந்திருந்தது. ஹாலில், சுயநினைவில்லாமல் கீழே தரையில் இயக்குநர் ஜனநாதன் விழுந்து கிடந்துள்ளார்.

உடனடியாக உதவியாளர்கள், ஆம்புலன்ஸுக்கு போன் செய்து, கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இயக்குநர் ஜனநாதன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், மூளைச்சாவு கட்டத்தில் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். நரம்பியல் மருத்துவர்கள் அவரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என திரையுலகினர், அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it