Theme Check

குருவின் சாதனையை தகர்த்த சிஷ்யன்.. ஒரே போட்டியில் ஷமியும் படைத்த சாதனை !!

குருவின் சாதனையை தகர்த்த சிஷ்யன்.. ஒரே போட்டியில் ஷமியும் படைத்த சாதனை !!

குருவின் சாதனையை தகர்த்த சிஷ்யன்.. ஒரே போட்டியில் ஷமியும் படைத்த சாதனை !!
X

தனது குருவான தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து அங்கு 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இரண்டாம் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
pant

இந்நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவர் பேட்ஸ்மேனை 101 முறை (93 கேட்ச் மற்றும் 8 ஸ்டம்பிங்) அவுட் செய்துள்ளார். அவர் இதனை 26 டெஸ்ட் போட்டிகளில் செய்துள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.

முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ் டோனி 36 போட்டிகளில் இச்சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் 100 டிஸ்மிஸலை நிறைவு செய்ததே இந்திய விக்கெட் கீப்பரின் சாதனையாக இருந்தது. இதனை தோனி மற்றும் சாஹா தங்கள் வசம் வைத்திருந்தனர். தற்போது அதனை பண்ட் தகர்த்துள்ளார்.

shami

அதேபோல், இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 9896 பந்துகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார் அவர். இதன் மூலம் மிகக் குறைந்த பந்துகளில் 200 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இந்திய பவுலர்களான அஷ்வின் (10248 பந்துகள்), கபில் தேவ் (11066 பந்துகள்) மற்றும் ஜடேஜா (11989 பந்துகள்) ஆகியோரை முந்தியுள்ளார் ஷமி.

மேலும், இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 மற்றும் அதற்கும் மேலான விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள் வரிசையிலும் ஷமி இணைந்துள்ளார்.

shami

newstm.in

Tags:
Next Story
Share it