Theme Check

ரேஷன் கடை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!

ரேஷன் கடை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!

ரேஷன் கடை பணியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை..!
X

முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடை முடிச்சூர் கிராமம்-2 25.01.2022 இரவு சட்டவிரோதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொது விநியோகத் திட்ட அரிசியை வேன் மூலம் கடத்த முயன்றபோது, குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் விற்பனையாளர் ஏ.கோமதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். கடத்தப்படவிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது.

இதனை அடுத்து, விற்பனையாளர் கோமதி, பண்டகசாலை நிர்வாகத்தால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள், கட்டுநர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு, தகுதியான அளவில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முறையாக விநியோகம் செய்ய கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரிசி கடத்தல் போன்ற முறைகேடுகளில் ஈடுபடும் நியாய விலைக் கடை பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், குற்ற வழக்கு தொடரப்பட்டு, தொடர்புடைய பணியாளர் பணி நீக்கம் செய்யப்படுவர்” எனக் கூறியுள்ளார்.

Next Story
Share it