Theme Check

திருமணமான 8 மாதத்தில் தகராறு! தீக்குளித்து தற்கொலை செய்த மனைவி! கதறியழுத கணவன்!

திருமணம் ஆன 8 மாதத்தில் மனக்கசப்பு..! கணவருடன் சண்டையால் தற்கொலை செய்து கொண்ட மனைவி

திருமணமான 8 மாதத்தில் தகராறு! தீக்குளித்து தற்கொலை செய்த மனைவி! கதறியழுத கணவன்!
X

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள காற்றாடி தட்டு பகுதியைச் சேர்ந்த சிவன்(28) - அர்ச்சனா(24) ஆகியோருக்கு கடந்தமே மாதம் திருமணம் நடைபெற்றது. அர்ச்சனாவின் பெற்றோர் அவரது சிறுவயதிலேயே இறந்து விட்டதால், அர்ச்சனா அவரது மாமா வீட்டிலே வளர்ந்து வந்துள்ளார். அர்ச்சனாவின் மாமா தான் சிவனுடன் இவருக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து அர்ச்சனா தற்கொலைக்கு முயன்றார்.

திருமணமான 8 மாதத்தில் தகராறு! தீக்குளித்து தற்கொலை செய்த மனைவி! கதறியழுத கணவன்!

அப்போது தீ பற்றியதால் அப்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்குச் சென்ற அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
திருமணமான 8 மாதத்தில் தகராறு! தீக்குளித்து தற்கொலை செய்த மனைவி! கதறியழுத கணவன்!

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அர்ச்சனாவின் கணவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணத்திற்கு விருப்பம் இல்லை என்ற போதும் தன்னை வளர்த்த மாமாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு சிவனை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணம் ஆனதிலிருந்தே இரண்டு பேருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

திருமணமான 8 மாதத்திலேயே தீக்குளித்து தற்கொலை செய்து இளம்பெண் இறந்தது அந்தப் பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய இளம் மனைவி, தற்கொலை செய்து கொண்டது குறித்து, கணவன் கதறியழுதது அந்த பகுதியினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது. இது க் உறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

newstm.in

Tags:
Next Story
Share it