மீன்பிடிப்பதில் தகராறு!! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மோதல்..!

மீன்பிடிப்பதில் தகராறு!! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மோதல்..!

மீன்பிடிப்பதில் தகராறு!! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மோதல்..!
X

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இரு பிரிவு மீனவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் அருகே கடலில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் 2 விசைப்படகில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள் 50 க்கும் மேற்பட்டோர் பைபர் படகில் சென்று அந்த படகை வழிமறித்து சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று கூறியுள்ளனர்.

மீன்பிடிப்பதில் தகராறு!! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மோதல்..!

அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதில் 6 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள்சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 2 பைபர் படகுகள் சேதம் அடைந்து கடலில் முழுகியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடிப்பதில் தகராறு!! நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மோதல்..!

இந்த தாக்குதலை கண்டித்து வெள்ளப்பள்ளத்தில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தும் காவல்துறையினர் விரைந்து வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பகுதியில் மோதல் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it