Theme Check

சவ ஊர்வலத்தில் சண்டை!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!

குத்தாலம் அருகே சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இவரின் இறுதி ஊர்வலத்தில் பூ வீசுவதில் சரவணன்(21) என்பவருக்கு..

சவ ஊர்வலத்தில் சண்டை!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!
X

குத்தாலம் அருகே சவ ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தில் விஜயகுமார் என்பவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்தார். இவரின் இறுதி ஊர்வலத்தில் பூ வீசுவதில் சரவணன்(21) என்பவருக்கும் ராமச்சந்திரன் என்பவருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

சவ ஊர்வலத்தில் சண்டை!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!

இதைத்தொடர்ந்து நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த சரவணனையும் அவரது நண்பர் சதீஷ் என்பவரையும் அழைத்து, பிரச்னை தொடர்பாக ராமச்சந்திரன் மற்றும் அவரது நண்பர்கள் செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோர் பேசியுள்ளனர். இதில் மீண்டும் தகராறு ஏற்படவே ராமச்சந்திரன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரவணனை குத்தியுள்ளார்.

சவ ஊர்வலத்தில் சண்டை!! பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!!

இதில் படுகாயமடைந்த சரவணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரன், செந்தில்குமார், மாதவன், ரஞ்சித் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


newstm.in

Tags:
Next Story
Share it