Theme Check

பொங்கல் வைப்பதில் தகராறு – இளைஞர் ஈட்டியால் குத்திக்கொலை!!

பொங்கல் வைப்பதில் தகராறு – இளைஞர் ஈட்டியால் குத்திக்கொலை!!

பொங்கல் வைப்பதில் தகராறு – இளைஞர் ஈட்டியால் குத்திக்கொலை!!
X

சிவகங்கை மாவட்டத்தில் கொங்கல் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் ஈட்டியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே இலந்தைகுளம் கிராமத்தில் 15ஆம் தேதி இரவு பொங்கல் விழா கொண்டப்பட்டது. அப்போது அதே ஊரைச் சேர்ந்த கருப்பசாமி (28) என்ற இளைஞர் ஊரில் உள்ளவர்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தியுள்ளார்.

அப்போது, இலந்தைகுளம் ஊராட்சி துணைத் தலைவர் ரவி, தன்னைக் கேட்காமல் ஏன் பொங்கல் விழா நடத்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

Murder

இதையடுத்து, ஊராட்சி துணை தலைவர் ரவியின் மகன்கள் சிவா, சிவாநாதம், ராஜ்குமார் மற்றும் ரவியின் உறவினர்கள் சேர்ந்து கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் அருண்குமார் ஆகியோரை தாக்கியுள்ளனர்.

இதில் விலங்குகளை தாக்கும் ஈட்டியைக் கொண்டு கருப்பசாமியை குத்தி உள்ளனர். இதில் கருப்புச்சாமி குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக சிவா, சிவநாதம், ராஜ்குமார், சரத்குமார் மற்றும் கண்ணன் ஆகியோரை கைது செய்து திருப்புவனம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it