முதல் திருமணத்தில் பிரிவு.. மீண்டும் காதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம்: ரசிகர்கள் வாழ்த்து !
முதல் திருமணத்தில் பிரிவு.. மீண்டும் காதலில் விழுந்த பிக்பாஸ் பிரபலம்: ரசிகர்கள் வாழ்த்து !

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சீரியல் மற்றும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் காஜல் பசுபதி. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், வயல் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து பிரபலமானார். திரைப்படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் அவரை டான் என்றே ஆதரவாளர்கள், ரசிகர்கள் அழைக்கின்றனர்.

காஜல் பசுபதி ட்விட்டரில் படு ஆக்டிவ். சினிமா, நாட்டு நடப்பு பற்றி ட்வீட் செய்வார். இது மட்டுமல்லாமல் சிலரை மரண கலாய் கலாய்ப்பார். இது மட்டும் இல்லாமல் கலர் கலாராய் டிரெஸ் போட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் காஜல் பசுபதி. இந்த நிலையில் காஜல் பசுபதி தனது காதலை வெளி உலகத்துக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காஜல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 8 மாசமா Dm ல பேசிட்டு இருந்தோம் நேத்து சொல்லிட்டேன்.. இன்னைக்கு.. Accept பண்ணிட்டான்.. #TwitterLove என தெரிவித்துள்ளார். அவரின் ட்வீட்டை பார்த்த ஆதரவாளர்கள் சிலரோ, அது நான் தானே என கிண்டல் செய்திருக்கிறார்கள். டான் உங்களுக்கு ஒரு துணை வேண்டும் என்று ஆதரவாளர்கள் கூறி வந்த நிலையில் இப்படி ட்வீட் செய்திருக்கிறார். அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். சிலரோ, உண்மையா தான் சொல்றீங்களா, இல்லை கலாய்க்கிறீர்களா டான் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக காஜல் பசுபதி, சாண்டி மாஸ்டரை காதலித்து திருமணம் செய்தார். அவர்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. விவாகரத்து ஆனாலும் சாண்டி மாஸ்டருடன் நட்பாக பழகி வருகிறார் காஜல். சாண்டியின் மனைவி சில்வியாவுடனும் நட்பாக இருக்கிறார்.
8மாசமா Dm ல பேசிட்டு இருந்தோம் நேத்து சொல்லிட்டேன் இன்னைக்கு
— Kaajal Pasupathi (@kaajalActress) November 30, 2021
Accept பண்ணிட்டான்🥰#TwitterLove ❤️
newstm.in

