Theme Check

பிரிந்துசென்ற மனைவி.. 7 வயது சிறுவனை சுத்தியால் அடித்து கொலை செய்த மாமா !!

பிரிந்துசென்ற மனைவி.. 7 வயது சிறுவனை சுத்தியால் அடித்து கொலை செய்த மாமா !!

பிரிந்துசென்ற மனைவி.. 7 வயது சிறுவனை சுத்தியால் அடித்து கொலை செய்த மாமா !!
X

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான். குடும்பப் பிரச்சனை காரணமாக மனைவி பிரிந்து இவர் தனியாக வாழ்ந்து வருகிறார். தன்னை விட்டு மனைவி பிரிந்து சென்றதற்கு, தனது சகோதரி சபியாதான் காரணம் என ஷாஜகான் நினைத்துள்ளார். இதனால் முன்விரோதம் இருந்துள்ளது.

இந்த நிலையில் ஷாஜகான் இன்று அதிகாலை சபியாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீட்டிலிருந்து சபியா மற்றும் அரவது ஏழு வயது மகன் அல்தாப் ரியாஸை சுத்தியலால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் தடுக்க வந்த சபியாவின் தாயாரையும் ஷாஜகான் தாக்கியுள்ளார்.

murder

இதையடுத்து சபியாவின் மகளின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததைப் பார்த்த ஷாஜகான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பிறகு பலத்த காயத்துடன் இருந்த சிறுவன் அல்தாப் ரியாஸை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இருந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஷாஜகானை தேடி வருகின்றனர்.

newstm.in


Tags:
Next Story
Share it