Theme Check

திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..!

திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..!

திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் கிராம மக்கள்..!
X

அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சியில் உள்ள 3வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐயப்பன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் அத்தாணி பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவர், அத்தாணி பேரூராட்சியில் 3-ம் வார்டு கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு வீட்டில் ஐயப்பன் தூங்கிக் கொண்டு இருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக, உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வேட்பாளரின் உயிரிழப்பு குறித்து செய்தி அறிந்த அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் நேரில் சென்று ஐயப்பன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

தேர்தல் நடக்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளர் ஐயப்பன் மறைவால் அப்பகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
Share it