அடுத்தடுத்து உயிரிழந்த திமுக வேட்பாளர்கள்.. தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் !!
அடுத்தடுத்து உயிரிழந்த திமுக வேட்பாளர்கள்.. தேர்தலை ரத்து செய்த தேர்தல் ஆணையம் !!

இரு பேரூராட்சிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அடுத்தடுத்து மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, இரு வார்டுகளுக்கான வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த அம்மாபேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 2ஆவது வார்டில் திமுக சார்பில் சித்து ரெட்டி (62) போட்டியிட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். இந்த நிலையில் சித்து ரெட்டி, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் 3ஆவது வார்டில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பெருமாபாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் (50) என்பவர் போட்டியிட்டார். இவர் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் இரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். அடுத்தடுத்து திமுக வேட்பாளர்கள் உயிரிழந்ததால் திமுகவினர் சோகமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.
இதனிடையே, வேட்பாளர்கள் உயிரிழந்ததையடுத்து 2 வார்டுக்கான வாக்குப்பதிவை மாவட்ட தேர்தல் அதிகாரி ரத்து செய்துள்ளனர். விரைவில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

