Theme Check

போடாத சாலைக்கு ரூ.3 கோடி பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்!?

போடாத சாலைக்கு ரூ.3 கோடி பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்!?

போடாத சாலைக்கு ரூ.3 கோடி பில் போட்ட திமுக ஒப்பந்ததாரர்!?
X

சாலைகள் புதிதாக போடாமலே போட்டதாக கூறி திமுகவை சேர்ந்த ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து அவர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் , கரூர் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் 170 கோடியில் நெடுஞ்சாலைத் துறையில் பணிகளுக்கு ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

M-R-Vijayabhaskar

ஈசநத்தம், கூம்பூர், வீரியப்பட்டி ஆகிய சாலைகளை, வேலை செய்யாமல் ஒப்பந்ததாரர் பணம் எடுத்துள்ளார். நன்றாக உள்ள இந்த சாலைகள், புதிதாக அமைக்கப்பட உள்ளதாக கூறி சுமார் 3 கோடி அரசு பணம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணை நடத்த வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என தெரிவித்தார். இதுமட்டுமல்லாது, கரூர் மாவட்டதில் நெடுஞ்சாலை துறை, கிரசர், சவுடு மண் என திமுகவினர் கூறு போட்டு விற்று வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

anna arivalayam

140 கோடி ரூபாய் வேலையை அமைச்சரின் ஆதரவாளர் எம்.சி.எஸ் ஆனந்த் காண்ட்ராக்டர் ஒருவர் மட்டுமே ஒப்பந்தம் செய்துள்ளார் எனவும் தெரிவித்தார். மேலும் அதிமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பிரதிநிதித்துவம் தருவதில்லை என்றம் முன்னாள் அமைச்சர் கூறியுள்ளார்.

newstm.in

Next Story
Share it