Theme Check

உதயநிதியின் பேச்சை கேட்காத திமுக நிர்வாகிகள்!!

உதயநிதியின் பேச்சை கேட்காத திமுக நிர்வாகிகள்!!

உதயநிதியின் பேச்சை கேட்காத திமுக நிர்வாகிகள்!!
X

திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கேட்காமல் திமுக நிர்வாகிகள் மீண்டும், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், 'உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும்' என்று மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

திருச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் முகாமிட்டிருந்த நிலையில், இந்த தீர்மானம் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, 'தனக்கு அமைச்சர் பதவி கேட்டு யாரும் தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்' என்று உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

Udhayanidhi

இந்நிலையில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் விருப்பத்தை அப்படியே நிறைவேற்றும் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடந்தது. திருச்சி தில்லைநகர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி தலைமை வகித்தார்.

கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கிட வேண்டும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் இப்படி தீர்மானம் நிறைவேற்றி தலைமைக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அவரது பேச்சை அவரது கட்சிகாரர்களே கேட்கவில்லையோ என்று எண்ண வைத்துள்ளது.

newstm.in

Next Story
Share it