திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுமை காரணமாக க.அன்பழகன் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல்நலக்குறைவு காரணமாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
முதுமை காரணமாக க.அன்பழகன் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்தனர்.
அதன்பிறகு க.அன்பழகனின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரை தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளதாகவும் அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in
Tags:
Next Story


