Theme Check

திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. நீடிக்கும் பதற்றம் !!

திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. நீடிக்கும் பதற்றம் !!

திமுக பிரமுகர் வெட்டி படுகொலை.. நீடிக்கும் பதற்றம் !!
X

மர்ம கும்பலால் சுற்றிவளைத்து திமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

திருநெல்வேலி மாநகர 32வது வார்டு செயலாளராக இருப்பவர் பொன்னு தாஸ் என்ற அபே மணி (32). இவர் தனியாக அபே ஆட்டோ ஒர்க் ஷாப் நடத்திவந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு 11 மணியளவில் வீட்டிற்கு சென்றுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

death

அப்போது, தெற்கு பஜார் பகுதியில் அவரை ஒரு மர்ம கும்பல் விரட்டியது. அவர்களிடம் இருந்து தப்பியோட முயன்றப்போதும், அக்கும்பல் அபே மணியை வெட்டிக் கொலை செய்தது. சம்பவம் நடந்த இடம் மாநகர போலீஸ் ஸ்டேஷனுக்கு மிக அருகாமையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொலை தொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அவரது உடலை மீட்டனர். தொடர்ந்து கொலையாளிகள் யார் எனவும்? கொலைக்கான காரணம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.

death

இதில், டாஸ்மாக் மதுபானக் கடை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது. எனினும் வேறு ஏதும் காரணம் உள்ளதா என விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக பிரமுகர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it