"5 ஆண்டுகால ஆட்சியில் திமுக கோடி கோடியாய் பணம் சேர்த்தது" : திமுக எம்எல்ஏ ஒப்புதல்
எம்.எல்.ஏவும், திமுக ஐ.டி பிரிவு செயலாளருமான பி.டி. தியாகராஜன் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிடம் போதிய பணம் இல்லை என்றும், 2011 வரை 5 ஆண்டுகால ஆட்சி நிறைவு பெற்ற பிறகு கோடி கோடியாக திமுக பணம் சம்பாதித்தது என தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏவும், திமுக ஐ.டி பிரிவு செயலாளருமான பி.டி. தியாகராஜன் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், 2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது திமுகவிடம் போதிய பணம் இல்லை என்றும், 2011 வரை 5 ஆண்டுகால ஆட்சி நிறைவு பெற்ற பிறகு கோடி கோடியாக திமுக பணம் சம்பாதித்தது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுகவும், மத்தியில் திமுக கூட்டணியுடன் காங்கிரஸும் ஆட்சி செய்ததால், கோடி கோடியாய் திமுகவிடம் பணம் சேர்ந்து விட்டது என்று தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அதிக அளவில் செலவு செய்தும், வெறும் 23 இடங்களில் மட்டுமே திமுகவால் வெல்ல முடிந்தது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பி.டி. தியாகராஜன் கூறியுள்ள இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
"2006-ல் #DMK-விடம் பணம் இல்லை; 2011-ல் 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு தமிழகத்திலும் டெல்லியிலும் ஆட்சியால் கோடி கோடியாய் பணம் சேர்ந்து விட்டது" - @ptrmadurai ஒப்புதல் வாக்குமூலம். 10 வருடம் கழித்து 2021 ஆட்சியை தி.மு.க-விடம் கொடுத்தால் ஒவ்வொரு தமிழனும் கோவணத்துடன் திரியும் நிலை வருமோ? pic.twitter.com/yUPrR5eLoW
— SG Suryah (@SuryahSG) February 25, 2020
newstm.in

