இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திமுக எம்எல்ஏ.. ஆசிய பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று அசத்தல் !
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த திமுக எம்எல்ஏ.. ஆசிய பளுதூக்கும் போட்டியில் பதக்கம் வென்று அசத்தல் !

துருக்கியில் ஆசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா. திமுகவைச் சேர்ந்த இவர் வழக்கறிஞரும் ஆவர். எனினும் சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பளு தூக்கும் போட்டியில் கவனம் செலுத்தி வந்தார். இதில் தனது திறமையை நிரூபித்து தமிழகம் மற்றும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றார். மேலும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிக்குத் தேர்வானர்.

இந்த நிலையில், ஆசிய அளவிலான பளு தூக்கும் போட்டி துருக்கி நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினரான ராஜா பங்கேற்றார். 140 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்ட, சட்டமன்ற உறுப்பினர் ராஜா, புள்ளிகளின் அடிப்படையில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
மேலும் தற்போது வெண்கலப்பதக்கம் வென்று வெற்றி பெற்றதை தொடர்ந்து நியூசிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்பை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
newstm.in

