திமுக எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா கைது !!
திமுக எம்.பி திருச்சி சிவா மகன் சூர்யா கைது !!

பணம் கேட்டு மிரட்டியதாக திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா அண்மையில் பாஜகவில் இணைந்தார். திமுக பிரமுகரின் மகன் பாஜகவில் இணைந்தது அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இதனையடுத்து அவருக்கு பாஜகவில் மாநில அளவிலான ஓபிசி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த சூழலில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கடந்த 11 ஆம் தேதி உளுந்தூர் பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் திருச்சி சிவாவின் மகனும் பாஜக பிரமுகருமான சூர்யாவின் காரும் மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தன் காருக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சூர்யா அந்த தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் கேட்டுள்ளார்.

ஆனால் அவர்கள் மீது தவறு இல்லையென்றும் கூறப்படுகிறது. மேலும் பணத்தை கொடுக்காததால் தனியார் நிறுவனத்தின் பேருந்தை சூர்யா எடுத்துச்சென்றுள்ளார். இந்த நிலையில், பேருந்தை எடுத்து சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக பேருந்தின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
தனியார் ஆம்னி பேருந்தை அபகரித்ததாக திருச்சி கண்டோன்மென்ட் காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவுச் செய்யப்பட்டுள்ள நிலையில் சூர்யா சிவா கைது செய்யபடப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை திமுக மற்றும் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

