Theme Check

சாம்பாரில் விஷம் வைத்து திமுக பிரமுகர் கொலை!!

சாம்பாரில் விஷம் வைத்து திமுக பிரமுகர் கொலை!!

சாம்பாரில் விஷம் வைத்து திமுக பிரமுகர் கொலை!!
X

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு சடையன்காடு பகுதியை சேர்ந்த திமுக கிளைச் செயலாளரான தேவேந்திரன் (46), சூர்யா தம்பதிக்கு குழந்தை இல்லை. கடந்த நவம்பர் மாதம் தேவேந்திரனுக்கு மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்று வந்தார்.

உடல் நலம் தேறிய அவருக்கு ஜனவரி 4ஆம் தேதி மீண்டும் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரண்டு நாட்களில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேவேந்திரன் உயிரிழந்து 15 நாட்கள் ஆன நிலையில், அவரது மனைவி சூர்யா எந்தக் கவலையும் இல்லாமல் செல்போனை பார்த்து தனியே சிரித்து மகிழ்வை சதீஷ் கண்ணா என்ற உறவினர் கவனித்தார்.

arrest

இதனையடுத்து சூர்யாவின் செல்போனை ரகசியமாக பரிசோதித்த சதீஷ் கண்ணா, அவருடைய வீட்டில் 15 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்த அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவருடன் சூர்யா அதிகம் பேசிக்கொண்டு இருந்ததை கண்டறிந்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், 32 வயதான சந்திரசேகரனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் வேட்டைகாரணிருப்பு போலீசார் நடத்திய விசாரணையில், சூர்யாவுக்கும், சந்திரசேகரனுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கல்லீரல் பாதிப்பிலிருந்து மீண்டு வந்த தேவேந்திரனுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி சூர்யாவும், சந்திரசேகரனும் சாம்பாரில் எலி மருந்தை கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து சந்திரசேகர் மற்றும் சூர்யாவை போலீஸார் கைது செய்தனர்.

newstm.in

Next Story
Share it