Theme Check

கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்!! வாடகை பாக்கி ரூ.22 லட்சமாம்!!

மதுரை சிம்மக்கல் பகுதியில் புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றிலும் 30 சென்ட் நிலம் அறநிலைத்துறையின் ஊழல் அதிகாரிகள் சிலரால், பல ஆண்டுகளுக்கு முன்பு மாத வாடகையாக வெறும் ரூ.32 நிர்ணயம் செய்து பலருக்கு கை மாற்றப்பட்டது. இவரை போலவே காலி இடத்தில் கடைகளைக் கட்டி, வாடகைக்கு எடுத்த 11 பேரும் உள் வாடகைக்கு

கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்!! வாடகை பாக்கி ரூ.22 லட்சமாம்!!
X

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான பழமையான காசிவிஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியில் நவீன கழிப்பிடம், குளியறை என கட்டிடங்களைக் கட்டி வாடகைக்கு விட்ட தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் செ. போஸ் என்பவர் உட்பட மொத்தம் 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

மதுரை சிம்மக்கல் பகுதியில் புகழ்மிக்க காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றிலும் 30 சென்ட் நிலம் அறநிலைத்துறையின் ஊழல் அதிகாரிகள் சிலரால், பல ஆண்டுகளுக்கு முன்பு மாத வாடகையாக வெறும் ரூ.32 நிர்ணயம் செய்து பலருக்கு கை மாற்றப்பட்டது.

கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்!! வாடகை பாக்கி ரூ.22 லட்சமாம்!!

1998க்கு பின் வாடகை ஒப்பந்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதும், புதிய நபர்களுக்கு வாடகைக்கு விட கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. தி.மு.க., மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி 82வது வார்டு முன்னாள் கவுன்சிலருமான செ.போஸ், பாலு, ராஜாராம், அருண், போஸ், மதுரை வீரன், ஜாபர், கதிரேசன், ராஜேந்திரன், ஐயப்பன், நாகராஜன், சீனிவாசன் ஆகியோருக்கு பல்வேறு காலகட்டங்களில் கோயில் நிர்வாகம் வாடகைக்கு இந்த இடத்தை கொடுத்திருந்தது. கோயிலுடன் இணைந்த கல் மண்டபத்தில் தடுப்புச்சுவர் எழுப்பி, கல் மண்டபத்தில் நவீன கழிப்பறைகள், குளியலறைகளை கட்டி திமுக பிரமுகர் செ.போஸ் கட்டணம் வசூலித்துக் கொண்டிருந்தார். எனினும், கோயிலுக்கு செலுத்த வேண்டிய குறைந்தபட்ச வாடகைத் தொகையை செலுத்தவில்லை.

இவரை போலவே காலி இடத்தில் கடைகளைக் கட்டி, வாடகைக்கு எடுத்த 11 பேரும் உள் வாடகைக்கு விட்டு கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் இது நாள் வரையில் ஏப்பம் விட்டு வந்தனர். இதில் திமுக பிரமுகர் செ.போஸ் மட்டுமே வாடகை பாக்கியாக ரூ.22 லட்சம் வைத்திருந்தார்.

கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்!! வாடகை பாக்கி ரூ.22 லட்சமாம்!!

கோயில் இணை கமிஷனர் நடராஜன் கோயில் இடத்தை உள் வாடகைக்கு விட்ட 12 பேர் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கோயில் நிலத்தில் இருந்து காலி செய்யும்படி, நிர்வாகம் சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் ஆசாமிகள் அசரவில்லை. போலீசார் பாதுகாப்புடன் நேற்று கல் மண்டபம் மற்றும் கடைகள் காலி செய்யப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது. செ.போஸ் உள்ளிட்டோரிடம் இருந்து வாடகை பாக்கியை வசூலிக்க அவர்களது சொத்துக்களை நீதிமன்றம் மூலம் பறிமுதல் செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it