“பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கும்” : சீமான் அதிரடி!!
“பாஜக உடன் திமுக கூட்டணி வைக்கும்” : சீமான் அதிரடி!!

திமுக விரைவில் பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், ராஜூவ் காந்தி கொலை மற்றும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய மறுப்பது துரோகம் என்றும், 7 தமிழர் விடுதலை மாநில அரசின் கையில் இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

சட்டம் தடையாக இருக்கிறதென்றால் அதை இயற்றியவர்கள் திரும்பப்பெறுவதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பி அவர், அதிமுக ஆட்சியில் விடுதலை செய்யப்பட்ட 100 பேரில் இஸ்லாமியர்கள் இல்லை என்று தெரிவித்தார்.
இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டும் ஆனால் அவர்களை விடுதலை செய்ய மறுப்பதா இஸ்லாமியர்களின் பாதுகாவளர் என கூறும் திமுக இஸ்லாமியர்களை சிறையில் வைத்து பாதுகாப்பதா என்றார். அதிமுக ஆட்சியில் பாஜக-விற்கு அடிமைகளாக இருந்தார்கள், தற்போது திமுக பாஜக-விற்கு கொத்தடிமைகளாக இருக்கிறார்கள் என்று சாடினார்.

பிஜேபிக்குள் திமுக புகுந்துவிட்டது என்று கூறிய சீமான், ஆட்சியில் இல்லாத போது, நீட் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக தற்போது அனைத்திற்கும் மௌனமாக இருபது ஏன் என்றார்.
அதேபோல் ஒவ்வொரு முறையும் ஆளுநரை பார்த்துவிட்டு வரும் போதெல்லாம் தங்கள் எதிர்ப்பை திமுக மாற்றி வருவதாகவும்,விரைவில் திமுக பாஜக உடன் கூட்டணி வைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் சீமான் தெரிவித்தார்.
newstm.in

