Theme Check

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள்.. சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள்.. சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு..!

டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுகள்.. சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிப்பு..!
X

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பல்வேறு போட்டித் தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இன்ஜினியரிங் சார்நிலை பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த 2021 செப்டம்பர் 18-ம் தேதி நடந்தது. இதற்கான மதிப்பெண் விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மீன்வளத்துறை இளநிலை பொறியாளர், கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் மே மாதம் 9-ம் தேதி நடக்க உள்ளது.

நெடுஞ்சாலை துறையில், இளநிலை வரைவாளர் பணிக்கு அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் வரும் மே மாதம் 12 மற்றும் 13-ம் தேதி நடக்க உள்ளது.

பொதுப்பணித்துறையில், இளநிலை வரைவாளர் பணி தேர்வுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் வரும் மே மாதம் 16 முதல் 18-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதுகுறித்த மேலும் விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story
Share it